ராமநாதபுரம் தொகுதியில் மற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பிரச் சாரத்தைத் தீவிரப்படுத்தி உள்ள நிலையில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜா. விஜயபாஸ்கர் சத்தமில்லாமல் இருப்பது அக்கட்சியினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் கமல்ஹாசனே நிற்க வேண்டும் என 50-க்கும் மேற்பட்ட விருப்ப மனுக்கள் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அளிக்கப்பட்டன. இதற்கிடையே அந்தக் கட்சியின் வேட்பாளராக சென்னை மதுராவயலைச் சேர்ந்த லோட்டஸ் சோலார் எனர்ஜி உரிமையாளர் ஜா. விஜயபாஸ்கரை கடந்த 24-ம் தேதி கமல் அறிவித்தார். ஆனால், அறிவிப்போடு சரி. அதன்பிறகு வேட்புமனுவைத் தாக்கல் செய்த விஜய பாஸ்கர், தொகுதியில் இதுவரை பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை.
இதுகுறித்து அக்கட்சியினர் கூறியதாவது: மிகவும் தாமதமாக அறிவிக்கப்பட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார். கட்சி சின்னம் இல்லாத அமமுக வேட்பாளர் வ.து.ந. ஆனந்த்தும் கிராம் கிராமமாக பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால், எங்கள் கட்சி வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு சத்தமில்லாமல் உள்ளார். கமல்ஹாசன்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப் பில் முதற்கட்ட தேர்தல் பணிகளை செய்து வந்தோம். தொகுதியில் வேட்பாளர் அறிமுகக் கூட்டங்களை நடத்தி, அதன்பிறகு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் அலு வலகம் திறக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறியே தெரியவில்லை என்றனர்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஜா. விஜயபாஸ்கரிடம் கேட்டபோது, " தேர்தல் களத்துக்கு தேவையான துண்டுப் பிரசுரங்கள், கட்சிக் கொடிகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. படிப்படியாக தேர்தல் பணியை தீவிரப்படுத்துவோம். எங் கள் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ராமநாதபுரத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மேற்கொள்ளும் பிரச்சாரம் எனக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தரும் என்றார். பிரதான கட்சிகளின் மின்னல் வேகப் பிரச்சார பலத்துக்கு முன், மக்கள் நீதி மய்யம் தொகுதியில் தாக்குப் பிடிக்குமா என்பது அந்த வேட்பாளருக்கே வெளிச்சம்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago