திராவிடக் கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிடாதது ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், தமிழத்தில் அதிமுக கட்சி பாஜக, தேமுதிக, பாமக மற்றும் சிறிய கட்சிகளுடனும் திமுக கட்சி காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட்கள் மற்றும் சில சிறிய கட்சிகளுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன.
இதற்கிடையே சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. வேலூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால்... என்கிறீர்கள். வந்தபோது ஏன் செய்யவில்லை? ஓட்டுக்குக் காசு கொடுக்காமல், உங்கள் பிள்ளைகளைத் தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற்றுக் காட்டுவீர்களா? அதை மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இவர்கள்தான் நல்லவர்கள் ஆயிற்றே, பெரிய கட்சிகள், நல்லாட்சி கொடுத்தவர்கள்தானே... ஏன் தனியாக நின்று தேர்தலைச் சந்திக்கமுடியவில்லை? எதற்குக் கூட்டணி?
முதலில் கூட்டத்துக்குக் காசு கொடுக்காமல் கூட்டி வரமுடியுமா? இவர்களால் முடியுமா? முதலில் ஓட்டுக்குக் காசு கொடுக்காமல் வாக்குகளைப் பெற முடியுமா?'' என்று கேள்வி எழுப்பினார் சீமான்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago