மாநில உரிமைகளை மீட்டெடுத்தவர் ஜெயலலிதா: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

By செய்திப்பிரிவு

தினமும் பணத்தைப் பிடிப்பதாக செய்திகள் வருகின்றன. வியாபாரிகளிடம் பணத்தைப் பிடிப்பது சாதனை அல்ல. கடைசி இரண்டு நாளில் போலீஸ் செயலிழந்துவிடும், தேர்தல் ஆணையம் தோல்வி அடையக்கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.அழகிரி இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''காங்கிரஸ் கட்சியில் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். வேட்பாளர் தகுதிக்கு பொருத்தமானவர் சுதர்சன நாச்சியப்பன். கார்த்தி சிதம்பரத்தை தேர்ந்தெடுத்தது கட்சி மேலிடம். அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். சுதர்சன நாச்சியபனின் கருத்தை கட்சி மேலிடத்தில் தெரிவிக்கலாம்.

கார்த்தி சிதம்பரத்திற்கு 8 விண்ணப்பங்களும், சுதர்சன நாச்சியப்பனுக்கு 1 விண்ணப்பமும் கட்சி மேலிடத்திற்கு வந்தன. காங்கிரஸ் ஜனநாயகக் கட்சி. கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக மன்மோகன் சிங் தான் முடிவு செய்தார்.

வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் வருத்தப்படுவது அவரது உரிமை. கார்த்தி சிதம்பரம் தோல்வி அடைவார் என்று சுதர்சன நாச்சியப்பன் சொல்வது வேதவாக்கல்ல. கட்சித் தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். கோபத்தில் பேசுகிறார் நாச்சியப்பன்.

வருத்தத்தை நியாயமான முறையில் வெளிப்படுத்துங்கள். சிதம்பரம் முக்கியமான தலைவர். துல்லியத் தாக்குதலை பாஜக மீது நடத்தி வருகிறார். நிர்பந்தத்தின் காரணமாக கார்த்தி சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்படுவில்லை. கட்சித் தலைமையை யாரும் நிர்பந்திக்க முடியாது. ஆண்டு முழுவதும் செல்வப்பெருந்தகை கட்சிக்காக உழைக்கிறார்.

அவருக்கு சீட் கிடைக்கவில்லை என வருத்தம் இருக்கலாம். கட்சித் தலைமையின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ராகுல், பிரியங்கா தேர்தல் பரப்புரைக்கு வருகிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்கள் யாரும் புது வேட்பாளர்கள் இல்லை.

வியாபாரிகள் கொண்டு வரும் பணத்தைப் பிடிப்பது சாதனை அல்ல. கடைசி 2 நாட்கள் போலீஸ் செயலிழந்து விடும். தேர்தல் ஆணையம் தோல்வி அடையக்கூடாது. பணநாயக தேர்தலாக இருக்கக் கூடாது. தேர்தல் அறிக்கை ராகுல் காந்தியின் பரிசீலனையில் உள்ளது.

மாநில உரிமைகளை மீட்டெடுத்தவர் ஜவஹர்லால் நேரு. அடுத்ததாக கலைஞர், ஜோதிபாசு, ஜெயலலிதா போன்றோர் உள்ளனர். மாநில உரிமைகளை அடகு வைத்தவர் எடப்பாடி பழனிசாமி. காவிரி மேலாண்மை வாரியத்திற்கு இதுவரை நிரந்தரத் தலைவர் இல்லை.

கஜா புயல் நிவாரண உதவியை சரியான முறையில் மாநில அரசு பெறவில்லை. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக குரல் கொடுக்கவில்லை. மாநிலத்திற்கான நிதியைப் பெற முடியவில்லை. மேகேதாட்டு அணை விவகாரத்தில் மாநில உரிமைகளை எடப்பாடி பழனிசாமி அரசு விட்டுக் கொடுத்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி அரசை மத்திய அரசு துச்சமாக நினைக்கிறது.

பொதுக்கூட்டங்களில் நிறைய பொய் பேசியதால் முதல்வருக்கு தொண்டை கட்டிக்கொண்டது. ஜெயலலிதாவிடம் இருந்த வீரம் இவர்களுக்கு இல்லை. இந்தியாவுக்கு மோடி பாதுகாவலர் என்பது இயங்கவே முடியாதவர் ஒருவர் மாந்தோப்புக்குப் பாதுகாவலர் என்று சொல்வது போல் உள்ளது. பாஜக ராணுவத் தாக்குதலை தேர்தலுக்குப் பயன்படுத்துகிறார்கள்''.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்