திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் ஏப்.1-ம் தேதி முதல் தீவிர பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து தமிழகத் தின் பல்வேறு பகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுற்றுப்பயண விவரம்

திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி ஏப்ரல் 7-ம் தேதி திருப்பூரி லும், 8-ம் தேதி கோவையிலும் பிரச்சாரம் செய்கிறார்.

கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி., ஏப்ரல் 9-ம் தேதி சென்னை, 10-ம் தேதி விழுப்புரம், சிதம்பரம், 11-ம் தேதி நாகை, 12-ம் தேதி திருவாரூர், 13-ம் தேதி தூத்துக்குடி, 14-ம் தேதி கரூர், ஈரோடு, 15-ம் தேதி திருப்பூர், 16-ம் தேதி கோவையில் பிரச்சாரம் செய்கிறார்.

கட்சியின் மூத்த தலைவரும் தேசியக் குழு உறுப்பினருமான ஆர்.நல்லகண்ணு, ஏப்ரல் 10-ம் தேதி விழுப்புரம், 11-ம் தேதி சிதம்பரம், 12-ம் தேதி நாகை, 13-ம் தேதி மதுரை, 14-ம் தேதி தூத்துக்குடி, 15-ம் தேதி திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஏப்ரல் 1-ம் தேதி தென் சென்னை, 7-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர், 10, 11 தேதிகளில் நாகை, 13-ம் தேதி திருப்பூர், 14-ம் தேதி மதுரை, 15-ம் தேதி வட சென்னை, 16-ம் தேதி மத்திய சென்னையில் பிரச்சாரம் செய்கிறார்.

கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன் ஏப்ரல் 5, 6 தேதிகளில் கிருஷ்ணகிரி, 7-ம் தேதி ஈரோடு, 8-ம் தேதி திருப்பூர், 9-ம் தேதி மதுரை, 10-ம் தேதி விருதுநகர், 11-ம் தேதி தஞ்சை, 12, 13 தேதிகளில் நாகை, 14-ம் தேதி சென்னை, 15-ம் தேதி பெரம்பலூரில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்