மானாமதுரை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுக முன்னாள் அமைச்சர்: முட்டுக்கட்டை போடும் பெரியகருப்பன் ஆதரவாளர்கள்

By இ.ஜெகநாதன்

மானாமதுரை சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட திமுக முன்னாள் அமைச்சர் தமிழரசி முயற்சித்து வருகிறார். ஆனால், அவருக்கு மாவட்டச் செயலாளரின் ஆதரவாளர்கள் முட்டுக்கட்டை போட்டு வரு கின்றனர்.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் சமயநல்லூர் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தமி ழரசி, வெற்றிபெற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமை ச்சராக இருந்தார். தொகுதி சீரமைப்பில் சமயநல்லூர் தொகுதி இல்லாமல் போனது. இதனால் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் மானாமதுரை (தனி) தொகுதியில் போட்டியிட்ட தமி ழரசிக்கு எதிராக மாவட்டச் செயலாளர் பெரியகருப்பன், உள்ளூர் திமுகவினர் செய்த உள்ளடி வேலையால் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2016 சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, மானாமதுரை தொகுதி நிர்வாகிகளின் அனைத்து விசேஷங்களிலும் தமிழரசி பங் கேற்று வந்தார்.

தோல்வி அனுதாபம், அப் போதைய சிட்டிங் எம்எல்ஏ குண சேகரன் மீதான அதிருப்தியை பயன்படுத்தி வென்றுவிடலாம் என்று இருந்தார். அவர் வெற்றி பெற்றால் அமைச்சர் பதவிக்கு போட்டி வரும் எனக் கருதிய பெரியகருப்பன், 2016 தேர்தலில் தமிழரசிக்கு சீட் கொடுக்க முட்டுக்கட்டை போட்டார். மேலும் பெரியகருப்பன் ஆசியில் முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மகள் சித்ராசெல்விக்கு சீட் கிடைத்தது.

அதிமுக சார்பில் போட்டியிட்ட தனது சகோதரர் மாரியப்பன் கென்னடியிடம் சித்ராசெல்வி தோல்வி அடைந்தார். தனது சகோதரருக்கு விட்டுக் கொடுத் தார் என்று அப்போதே பேச்சு அடிபட்டது. மாரியப்பன் கென்னடி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மானாமதுரைக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறையாவது சீட் வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த தமிழரசிக்கு, புகைப்படம் வடிவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்பு மு.க. அழகிரியிடம் தமிழரசி ஆசிபெற்ற படத்தை கட்சித் தலைமைக்கு அனுப்பி அவருக்கு சீட் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால் விரக்தியில் உள்ள தமிழரசி, சீட் கிடைக்காவிட்டால், திமுக தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்க தயாராகி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்