எச்.ராஜாவும், வானதி சீனிவாசனும் வேட்பாளர் விவரங்களை முன்னதாகவே வெளியிட்டதில் எனக்கு வருத்தம்தான் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் கோவை, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் முறையே சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
ஆனால் திராவிடக் கட்சிகள் வேட்பாளர்களை விரைவில் அறிவித்துவிட்ட நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமானது. வேட்பாளர் பட்டியலை இறுதிப்படுத்தி டெல்லிக்கு அனுப்பி விட்டதாகவும் கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும் என்றும் தமிழிசை தெரிவித்திருந்தார். ஆனால் திடீரென காரைக்குடி செய்தியாளர் சந்திப்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை எச்.ராஜா அறிவித்தார்.
இது பாஜக தலைமையிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே ஊடகங்களில் யூகங்கள் அடிப்படையில் வேட்பாளர் குறித்து வெளியானதை இது உறுதிப்படுத்தியது.
அதேபோல பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோவை வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்து, புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் 'இந்து தமிழ்' இணையதளம் சார்பில், வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவிக்கும் முன்னரே எச்.ராஜாவும் வானதி சீனிவாசனும் அறிவித்தது ஏன்? தலைவராக அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று தமிழிசையிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ''வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகும் முன்னரே இருவரும் அறிவித்தது நிச்சயமாகத் தவறுதான். அது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் உள்நோக்கம் எதுவும் இல்லை. யூகங்களின் அடிப்படையில் பகிரப்பட்ட தகவல் இது.
வருங்காலத்தில் இதுபோன்று நடக்காது, நடக்கக் கூடாது. எனக்கு இதில் வருத்தம்தான். ஆனால் தேர்தல் நேரத்தில் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை. தேவையில்லாமல் மன அழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என்பதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago