சேலத்தில் இன்று பிரச்சாரத்தை தொடங் கும் முதல்வர் கே.பழனிசாமி வரும் திங்கள்கிழமை சென்னையில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்.
தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் நேற்று அறிவிக் கப்பட்டன.
இந்நிலையில், அதிமுக சார்பில் முதல்வர் கே.பழனிசாமி நேற்று சேலத்தில் அதிமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று கட்சியினரிடையே தேர்தல் பணிகள் குறித்து உரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, முதல் கட்ட பிரச்சாரத்தை அவர் இன்று சேலத்தில் தொடங்குகிறார். சேலம் கருமந்துரையில் பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர், கள்ளக்குறிச்சி தொகுதி தேமுதிக வேட்பாளர் சுதீஷுக்காக பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிற்பகல் தர்மபுரியில் பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
அதன்பின், 23-ம் தேதி சனிக்கிழமை, திருவண்ணாமலை, வேலூர், அரக்கோணம் தொகுதி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் தொகுதியில் பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்திக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
சென்னையில் பிரச்சாரம்
அன்று இரவு திருவள்ளூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் வேணுகோபாலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த பின்னர், சென்னை திரும்புகிறார். அதன் பின், சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் அடுத்த 2 தினங்கள் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago