திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (சனிக்கிழமை) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களைச் சந்தித்து கூறியதாவது:
"திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக வேட்பாளரின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். சூலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் காலமானதால், அத்தொகுதி காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு நேற்று தெரிவித்தோம்.
ஒட்டப்பிடாரம் தொகுதி நிலவரம் குறித்தும் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் எப்போது அறிவிக்கிறதோ அப்போது அந்த 3 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவோம். தேர்தல் ஆணையம் தான் அதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். ஒரு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தங்கள் மீதான குற்ற வழக்குகள், வருமான வரி தாக்கல் குறித்து சரியான தகவல்களை அளிக்காத வேட்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago