வேட்பாளர் பெயர் வேண்டாம். சின்னத்துக்கு வாக்கு கேளுங்கள் என்று என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக தரப்பினர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியில் ஆளுங்கட்சியான காங்கிரஸும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸும் நேரடியாக களத்தில் உள்ளன. காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கமும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் நாராயணசாமியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் பெயரும், முதல்வர் பெயரும் நாராயணசாமி என்பதால் குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து தொண்டர்களிடம் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, "வாக்கு கேட்கும் போது மக்களிடம் வேட்பாளர் பெயர் வேண்டாம். சின்னத்துக்கு வாக்கு கேளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் அதிமுக தரப்பில் எம்எல்ஏ அன்பழகனும் நிர்வாகிகளிடம், "வேட்பாளரின் பெயரைக் கூறாமல் சின்னத்தைக் கூறி வாக்கு கேளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரே பெயரால் வேட்பாளர் பெயரைக் குறிப்பிட்டாமல் சின்னத்தைக் கூறி வாக்கு சேகரிக்கவும், வேட்பாளர் பெயரையும் தவிர்க்கவும் தொண்டர்களுக்கு நிர்வாகிகள் அறிவுறுத்தத் தொடங்கியுள்ளதுதான் புதுச்சேரியின் அரசியல் விநோதமாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago