திமுக தலைமை பற்றி தன்னிடம் துரைமுருகன் குறை சொன்னார் என சுதீஷ் கூறியதற்கு துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
தேமுதிக, திமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை விவகாரத்தில் துரைமுருகன் ஆம் என்று சொல்ல, சுதீஷ் இல்லை என மறுக்க, அனைத்து தகவல்களையும் துரைமுருகன் கூற நான் பேசவில்லை என சுதீஷ் மறுக்க மோதல் வலுத்தது.
கோபத்தின் உச்சியிலிருந்த சுதீஷ், ''அண்ணன் துரைமுருகனும் நானும் ஒரே ஊர்க்காரர்கள். அவரும் நானும் பேசாத விஷயமில்லை. தனிப்பட்ட முறையில் பேசியதை வெளியில் சொல்லமாட்டேன். ஏனென்றால் என் வளர்ப்பு அப்படி. ஆனால் அவர் சொல்கிறார். அவர் அப்படி'' என்று தெரிவித்தார்.
பின்னர் ஒருபடி மேலே சென்று, ''துரைமுருகன் என்னிடம் பேசும்போது கட்சியைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் கட்சித் தலைமை பற்றியும் பேசியதையும் வெளியில் சொல்லட்டுமா?'' என ஆவேசமாக சுதீஷ் கேட்டார்.
இதுகுறித்து திமுக பொருளாளர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு துரைமுருகன் பதில் அளிக்கையில், ''நாங்கள் காரில் வரும்போதுதான் பேசினார். அப்படியெல்லாம் அவர் சொன்னார் என்றால் சுதீஷின் மீது நான் வைத்திருக்கும் மரியாதைக்கு அவரே ஒரு குந்தகத்தை ஏற்படுத்துகிறார் என்று அர்த்தம். அவர் எனது நண்பர். இரண்டு முறை என்னை எதிர்த்து நின்றவர். எங்க ஊர்க்காரர். அவர் அப்படி சொல்கிறார் என்றால் வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago