பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல், 1984-ல் நடந்த மக்களவைத் தேர்தல். 1980 தேர்தல் வெற்றி மூலம், தோல்வியிலிருந்து மீண்டுவந்த இந்திரா காந்தி தனது பதவிக்காலத்தை முடிக்கும் தறுவாயில், 1984 அக்டோபர் 30-ல் படுகொலை செய்யப்பட்டார். அவர் மரணமடைந்த சில மணி நேரங்களில், அவரது மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றார். இதைத் தொடர்ந்து டிசம்பரில் நடந்த முதல் கட்டத் தேர்தலில் 404 தொகுதிகளையும், 1985-ல் அசாம், பஞ்சாப் மாநிலங்களில் நடந்த இரண்டாவது கட்டத் தேர்தலில் மேலும் 10 தொகுதிகளையும் கைப்பற்றியது காங்கிரஸ். சுதந்திர இந்தியாவில் காங்கிரஸுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி அது. ராஜீவ் காந்தி பிரதமரானார்.
30 இடங்களில் வென்ற தெலுங்கு தேசம் கட்சிக்கு மிகப் பெரிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கிடைத்தது. தேசிய எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பிடித்த முதல் மாநிலக் கட்சி தெலுங்கு தேசம்தான். பாரதிய ஜனதா என்ற பெயரில் பழைய ஜனசங்கக் கட்சி, முதல் முறையாக இத்தேர்தலில் போட்டியிட்டது. அதன் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனதா கட்சி மேலும் செல்வாக்கு சரிந்து வெறும் 10 தொகுதிகளில் வென்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 தொகுதிகளில் வென்றது. திமுக இரண்டு, அதிமுக 12, சிரோமணி அகாலிதளம் ஏழு தொகுதிகளை வென்றன.
இந்திரா காந்தி படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் காங்கிரஸ் மீதான களங்கங்களில் ஒன்றாக இன்றுவரை பார்க்கப்படுகிறது. ராஜீவ் ஆட்சிக் காலத்தில் இந்தியா நவீனப் பாதையில் அடியெடுத்துவைத்தது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி தொடங்கியது. சாம் பித்ரோடாவின் தனிப்பட்ட அக்கறையால் எல்லா மாநிலங்களிலும் தொலைபேசி வசதிகள் ஏற்பட்டன. கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் துறையாகவும் ஏராளமான இளம் பொறியாளர்கள் மேற்கத்திய நாடுகளில் வேலைக்குப் போக உதவும் துறையாகவும் தகவல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்ததில் ராஜீவ் அரசின் பங்கு குறிப்பிடத்தக்கது!
1984 தேர்தலில் காங்கிரஸுக்கு ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மை வலு கிடைத்தும் அடுத்த பொதுத் தேர்தலில் அக்கட்சியால் ஆட்சிக்கு வர முடியாதபடி ஊழல் புகார்கள் வெளிவந்தன. இதுவே அதன் தோல்விக்கும் வழிகோலியது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago