ஜெயலலிதா பாணியில் தினகரன்

By என்.சன்னாசி

அதிமுகவில் இருந்து ஓரங்கப்பட்ட டிடிவி தினகரன், அமமுகவை கடந்த ஆண்டு தொடங்கினார். 2-ம் ஆண்டு அடியெடுத்து வைத்த நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது.

முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணி அமைப்பதில் மும்முரம் காட்டியபோதிலும், தினகரன் தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.

அமமுக சார்பில் தேர்தலில் போட்டியிடவே வேட்பாளர்கள் எவருமில்லை. ஆட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்தனர். ஆனால், இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கான அமமுக வேட்பாளர்களை தினகரன் நேற்று அறிவித்தார். மக்களவைக்கு 24 பேர், இடைத்தேர்தலுக்கு 9 பேர் என வேட்பாளர்களை அறிவித்துள்ளார். இதன் மூலம் அமமுகவில் வேட்பாளர்களுக்கு பஞ்சமில்லை என்பதை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்தி இருப்பதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அமமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

நாங்கள்தான் ஜெயலலிதாவின் அரசியல் நடைமுறைக் கொள்கையைப் பின்பற்றுகிறோம். அவர் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். அவருக்கு உகந்த எண்ணாக பெரும்பாலான நேரத்தில் நம்பர் ‘ 9 ’ போன்ற ஒற்றை இலக்க எண்ணை தேர்வு செய்வார். அதன்படி, எங்களது துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரனும் ராசி பார்த்து, இடைத்தேர்தல், மக்களவை தேர்தலுக்காக தலா 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை நேற்று காலை 9 மணிக்கு வெளியிட்டுள்ளார். சிறிது நேரத்துக்குப் பிறகு 15 பேர் கொண்ட மக்களவை வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியலை அறிவித்தார்.

தினகரனுக்கு ஆன்மிகத்தில் நம்பிக்கை உண்டு. எந்த ஒரு காரியத்துக்கும் நல்ல நேரம் பார்ப்பது வழக்கம். எந்தக் கட்சியும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்காதபோது, நாங்களே முதலில் அறிவித்தோம். அதே போன்று, திருவாரூருக்கு இடைத்தேர்தல் அறிவித்தபோதும், முதலில் வேட்பாளர் அறிவித்தது நாங்கள்தான். தேர்தலைக் கண்டு எங்களுக்கு பயமில்லை. கூட்டணி பற்றி கவலையில்லை. ஜெயலலிதா பாணியில் நம்பிக்கையோடு தனித்தே களம் காண்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்