தேமுதிக சார்பில் கள்ளக்குறிச்சியில் பிரேமலதா போட்டி?

By செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர் தொகுதிகள் ஒதுக்கப்படலாம்  என கூறப்படுகிறது.  இதில், கள்ளக்

குறிச்சியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அல்லது துணைச் செயலாளர் சுதீஷ் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொண்ட குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். மேலும், அதிமுக  கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதியில்  வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக உளவுத்துறை ஆய்வு முடிவும் தெரிவித்துள்ளது. இதனால், தேமுதிக பொருளாளர் பிரேமலதா போட்டியிடுவது உறுதியாகிவிட்டதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் தேமுதிகவுக்கு சாதகமான தொகுதிகளில் கள்ளக்குறிச்சியும் ஒன்று. 2009 தேர்தலில் 1.34 லட்சம் வாக்குகள், 2014 தேர்தலில் 1.64 லட்சம் வாக்குகளும் பெற்றோம். எனவே, இத்தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவார் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்