கள்ளக்குறிச்சி மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி போட்டியிடுகிறார்.
அவருக்கு வாக்கு கேட்டு நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி நேற்று அத்தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பேசியது.
மோடி வங்கியில் ரூ. 15 லட்சம் போடுகிறேன் என்று கூறினாரே, உங்கள் கணக்கில் போட்டாரா? இல்லை; ஆனால் அவரது கணக்கில் பணத்தை போட்டுக் கொண்டார். உலகத்திலேயே கிடைக்காத பிரதமர் நமக்குக் கிடைத்திருக்கிறார்.
5 வருடங்களில் 52 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்கான செலவு மட்டும் ரூ.2,500 கோடி.
தமிழகத்தில் கஜா புயல், வர்தா புயல், ஒக்கி புயல் தாக்கியபோது பாதிக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரணம் வழங்க பணம் இல்லை என்ற மோடி, குஜாராத்தில் ரூ.3,000 கோடியில் உலகிலேயே பெரிய சிலை அமைத்தார். அதனால் மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா?
ஸ்டாலின் அலை
கடந்த தேர்தலில் மோடி அலை வீசியது என்றனர். ஆனால் தற்போதைய தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது. தமிழகத் தில் ஸ்டாலின் அலை வீசுகிறது.
விஜயகாந்த் நல்லவர்
விஜயகாந்த் மீது நான் மதிப்பு மரியாதையும் வைத்துள்ளேன். அவர் நல்லவர். அவரை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. அவருக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாது. சட்டப்பேரவையில் விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அப்போதைய முதல்வரை எதிர்கொண்ட விதம் நீங்கள் அறிந்ததே.
அதே நேரத்தில் அவருடன் இருப்பவர்கள் செய்வது கேவலமாக உள்ளது. அப்படிப்பட்ட கேவலமானவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வருவார்கள். அவர்களிடம் நீங்கள் கேள்விகளை கேளுங்கள் என்று கூறினார்.விஜயகாந்த் மீது நான் மதிப்பு மரியாதையும் வைத்துள்ளேன். அவர் நல்லவர். அவரை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago