ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்கும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் நேருக்கு நேராகப் போட்டியிடுகின்றன.
ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி), புதுக் கோ ட்டை மாவட்டம் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர். ராமநா தபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மட்டும் 11,22,589 வாக்காளர்கள் உள்ளனர்.
1952-ம் ஆண்டு முதல் இதுவரை ராமநாதபுரம் தொகுதியில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறை, திமுக 3 முறை, அதிமுக 4 முறை, த.மா.கா. 1 முறையும், பார்வர்டு பிளாக் 1 முறை, சுயேட்சை 1 முறை வெற்றி பெற்றுள்ளன. 2009-ல் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெ.கே. ரித்தீஷ் வெற்றிபெற்றார். 2014-ல் தனியாக களம் கண்ட அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா 4 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றார். இம்முறை யாருக்கு?2014-ல் பாஜக கூட்டணியில் இருந்த மதிமுக, கொங்கு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி திமுகவுடன் இணைந்துள்ளன.
அதுபோல தனியாகப் போட்டியிட்ட இடதுசாரிகளும் திமுக பக்கம் உள்ளன. இந்த முறை முஸ்லிம் லீக் - பாஜக இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ்கனி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அக்கட்சி துணைச் செயலாளர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநில துணைத் தலைவர் குப்புராம், புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் ஆகிய மூவரில் ஒருவர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படலாம் என கட்சியினர் தெரிவித்தனர். திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் வேட்பாளர்களின் பிரச்சாரம், பண பலம், சிறுபான்மை சமூக வாக்குகள் உள்ளிட்ட பல காரணிகள் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago