நாகை அதிமுக வேட்பாளர் சரவணன் தொண்டர்களிடம் 4 மொழிகளில் பேசி அசத்தினார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சியினர் தங்களின் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்டனர். இதனிடையே நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் சரவணன் களமிறக்கப்பட்டுள்ளார்.
இதை முன்னிட்டு நாகையில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ் வேட்பாளர் சரவணனை அறிமுகப்படுத்தி மக்கள் முன்னிலையில் பேசினார்.
அதைத்தொடர்ந்து தொண்டர்களிடம் பேசிய சரவணன், தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் பேசி அசத்தினார். அத்துடன் ''நாடாளுமன்றத்தில் சமயத்துக்கு ஏற்றாற்போல தேவைப்படும் மொழியில் பேசி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன்'' என்றார். இதைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago