அரசியல் களத்தில் அடுத்த கட் டத்துக்குச் செல்லும் முனைப்பில் உள்ள அமமுக, ஆண்டிபட்டியில் வெற்றி பெற்றே தீர்வது என்ற முனைப்பில் களம் இறங்கி உள்ளது. இருப்பினும் அதிமுக, திமுக வகுக்கும் வியூகங்களால் அங்கு போட்டி வலுத்துள்ளது.
ஆண்டிபட்டி தொகுதி எம்ஜி ஆர், ஜெயலலிதா போட்டியிட்ட ஊர் என்பதால் தமிழக அளவில் உற்றுநோக்கப்படும் தொகுதி. இங்கு அதிமுக மீது தீவிர பற்று கொண்ட வாக்காளர்கள் நிறைந்திருப்பதால், அக்கட்சியின் நம்பிக்கையான தொகுதியாகவும் இருக்கிறது. ஆண்டிபட்டி, க. மயிலை என்று 2 ஒன்றியங்கள், ஆண்டிபட்டி, ஹைவேவிஸ், காமயக்கவுண்டன்பட்டி பேரூராட்சிகள், கூடலூர் நகராட்சி, உத்தமபாளையம் தாலுகா என்று மாவட்டத்தில் பரப்பளவு அதிகம் கொண்ட தொகுதியாக உள்ளது. இதுவரை இரட்டை இலைச் சின்னத்தோடு களம் கண்ட அதிமுக, தற்போது 2 அணிகளாக தேர்தலை சந்திக்கிறது.
இத்தொகுதியின் எம்எல்ஏ இருந்த தங்கதமிழ்ச்செல்வன் டிடிவி. தினகரனுடன் சேர்ந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த அவர், தொகுதி மக்க ளின் குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொண்டு செல்வாக்குடன் வலம் வருகிறார். அமமுக.வில் டிடிவி. தினகர னுக்கு அடுத்த நிலையில் கொள்கைப் பரப்புச் செயலாளர், தென்மண்டலப் பொறுப்பாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்து வருகிறார். அதனால் ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இத்தொகுதியில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர். இதுவரை தொகுதிக்கு செய்த பணிகளை நம்பி களம் இறங்கி உள்ளார். ஆனால், இரட்டை இலைச் சின்னம் இல்லாததால் அமுமுகவுக்கு சில இடங்களில் பின்னடைவாக இருக்கும் என அக்கட்சியினர் சந்தேகிக்கின்றனர்.
அதிமுக சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் முருக் கோடை ராமர் உள்ளிட்ட பலரும் வேட்பாளராக விரும்பி விண்ணப்பித்துள்ளனர். இவர் ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கமானவர் என்பதால், தற்போது இவரது பெயரும் முன்னிறுத்தப்பட்டு வரு கிறது. அதிமுக ஒன்றியச் செயலாளர் லோகிராஜனும் களம் இறக்கப்பட வாய்ப்புள்ளது. திமுக சார்பில் மாநில தீர்மானக் குழு இணைச் செய லாளரும், முன்னாள் மாவட்ட பொறுப்பாளருமான ஜெயக்குமார் வேட்பாளர் பட்டியலில் முன் னணியில் உள்ளார். இதற்கிடையே திமுகவினரும் பல்வேறு வியூ கங்களை வகுத்து வெற்றிபெற முனைப்புடன் களமிறங்கி உள் ளனர். இதனால் ஆண்டிபட்டி தொகுதி இம்முறை அரசியல் கட்சியினருக்கு ‘ஆட்டம் காட்டும்’ தொகுதியாகவே இருக்கும் என அரசியல் நோக் கர்கள் தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago