அமமுகவுக்கு குக்கர், தொப்பி, கிரிக்கெட் மட்டை ஆகிய மூன்று சின்னங்களில் ஏதேனும் ஒன்றை ஒதுக்குமாறு அக்கட்சியின் வேட்பாளர்கள் கேட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் சுயேச்சைகள் குக்கர் சின்னத்தையே கேட்டுள்ளனர். மக்களவைத் தேர்தலில் அமமுக 38 தொகுதிகளிலும், சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் போட்டி யிடுகிறது. ஆர்கே.நகரில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வென்றதால் அந்தச் சின்னத்தையே ஒதுக்க தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தது. அதை ஆணையம் ஏற்காததால் அமமுக நீதிமன்றத்துக்குச் சென்றது.
இந்த வழக்கில் குக்கர் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட முடியாது எனவும், ஆனால், அமமுகவுக்குப் பொதுச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டுமெனவும் உச்சநீ திமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்றுமுன்தினம் வேட்புமனுத் தாக்கல் செய்த அமமுக வேட்பாளர்கள் குக்கர், தொப்பி, கிரிக்கெட் மட்டை ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றை தங்களுக்கு ஒதுக்குமாறு கேட்டனர்.
இதில் முதல் முன்னுரிமையாக குக்கரும், அதற்கடுத்ததாக தொப்பியும் கேட்டுள்ளனர். உச்ச நீதிமன்றம் பொதுச் சின்னத்தை ஒதுக்க உத்தரவிட்டுள்ளதால், அமமுக வேட்பாளர்கள் கேட்ட சின்னங்களையே சுயேச்சைகள் கேட்டுள்ளனரா என்பது குறித்த விவரத்தை தேர்தல் ஆணையம் தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டு பெற்றுள்ளது. அதில், அமமுக வேட்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் ஏராளமான சுயேச்சைகள் குக்கர் சின்னத்தையே கேட்டுள்ளனர். மேலும் இப்பிரச்சினையில் தேர்தல் ஆணையம் உத்தரவு வரும் வரை அமமுக கேட்டுள்ள சின்னங்களை அக்கட்சிக்கோ அல்லது சுயே ச்சைகளுக்கோ ஒதுக் குவது குறித்து எந்த முடிவும் எடுக்க வேண்டாமென தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தர விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago