இது வாயில் வடைசுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி- பிரச்சாரத்தில் மோடி பற்றி கவிதை வாசித்த ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

 

 

மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கவிதை வாசித்தார் ஸ்டாலின்.

 

மக்களவைத் தேர்தல் களைகட்டியுள்ள நிலையில், தமிழத்தில் அதிமுக பாஜகவுடனும் திமுக காங்கிரஸுடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தலைவர்கள் அனைவரும் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் எழுத்தாளர் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கவிதை வாசித்தார் ஸ்டாலின்.

 

''மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதை சுருக்கமாகக் கவிதை வடிவில் எழுதி நண்பர் ஒருவர் எனக்கு வாட்ஸ் அப் செய்திருந்தார். அது இந்தக் கவிதைதான்...

 

இது பொல்லாத ஆட்சி, அதற்கு பொள்ளாச்சியே சாட்சி

இது துப்புக்கெட்ட ஆட்சி, அதற்கு தூத்துக்குடியே சாட்சி

இது தரிசாக்கும் ஆட்சி, அதற்கு நெடுவாசலே சாட்சி

இது மனுதர்ம ஆட்சி, அதற்கு நீட் தேர்வே சாட்சி

இது பாலைவன ஆட்சி, அதற்கு மேகதாதுவே சாட்சி

இது ஊழல் ஆட்சி, அதற்கு ரஃபேலே சாட்சி

இது நாணயங்கெட்ட ஆட்சி, அதற்கு செல்லாத நோட்டே சாட்சி

இது கொள்ளைக்கார ஆட்சி, அதற்கு ஜிஎஸ்டியே சாட்சி

இது மதவெறி ஆட்சி, அதற்கு மாட்டுக்கறியே சாட்சி

இது கொலைகார ஆட்சி, அதற்கு கொடநாடே சாட்சி

இது வாயில் வடைசுடும் ஆட்சி, அதற்கு மோடியே சாட்சி

இது எடுபிடி ஆட்சி, அதற்கு எடப்பாடியே சாட்சி என்று நண்பர் எழுதியிருக்கிறார்'' என்றார் ஸ்டாலின்.

 

ஜாடிக்கேற்ற மூடியாகவும் மூடிக்கேற்ற ஜாடியாக மோடியும் எடப்பாடியும் இருக்கின்றனர் என்றும் ஸ்டாலின் விமர்சித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்