இடைத்தேர்தல் வெற்றிக்காக சாதி அமைப்புகள், லெட்டர் பேடு கட்சிகளை ‘வளைக்கும்’ அதிமுக, திமுக

By சுப.ஜனநாயக செல்வம்

18 சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சாதி சங்கங்கள், பொதுநல அமைப்புகள், லெட்டர் பேடு கட்சிகளை அதிமுக, திமுக கட்சிகள் மும்முரமாக வளைத்து வருகின்றன.

தமிழகத்தில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 18 எம்எல்ஏக்கள், அமமுகவுக்கு தாவியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால் மக்களவைத் தேர்தலோடு அந்த 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் பிரதான கட்சிகளின் முழுக் கவனமும் இடைத் தேர்தலிலேயே உள்ளது.

ஆட்சியைத் தக்க வைக்கவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் 18 தொகுதிகளில் 6 தொகுதியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது. ஆனால், 18 தொகுதிகளிலும் அதிமுகவை தோல்வியடையச் செய்ய திமுகவும், அமமுகவும் கச்சிதமாக காய்களை நகர்த்தி வருவதாக அவற்றின் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்கு வங்கியை கணக்கில் கொண்டே அதிமுகவும், திமுகவும் கூட்டணிகளை அமைத்துள்ளனர். இதில் அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் அமமுகவால் ஏற்படும் இழப்புகளை சரிக்கட்ட பாஜக, பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளோடு கூட்டணி வைத்து அதிமுக தேர்தலை சந்திக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட 8 கட்சிகளோடு திமுக களம் காண்கிறது.

இருந்தாலும், தொகுதிக்குள் இருக்கும் அரசியல் கட்சிகளைச் சாராத லெட்டர்பேடு கட்சிகள், சாதிச் சங்கங்கள், பொதுநல அமைப்புகள், மகளிர் குழுக்களை வளைத்துப் போடும் முயற்சியில் அதிமுகவும், திமுகவும் களமிறங்கி உள்ளன. இதில் அந்த சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியில் சமுதாயக் கூடம் கட்டித் தருவதாகவும், கோயில்களை சீரமைத்து தரு வதாகவும் வாக்குறுதி அளித்து வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்துக்கு வாகன வசதி மற்றும் இதர வசதிகள் செய்து பலமாக கவனிப்பதாக வாக்குறுதி அளிப்பதால் சாதி அமைப்புகள் உற்சாகமாக உள்ளன.

இதுகுறித்து மதுரை அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவர் கூறுகையில், கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் மூலம் வட்டார அளவில் உள்ள சாதிச் சங்கங்கள், சமுதாய அமைப்புகள், பொது நல அமைப்புகளின் தலைவர்களை அணுகி இடைத்தேர்தலில் அவர்களின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்