திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திடீரென இடைத்தேர்தல் தொகுதி களில் பிரச்சாரம் செய்யாமல் புறக்கணித்து வருவதால் அக்கட்சியினர் குழப்பத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தல் ஆட்சியை முடிவு செய்யும் முக்கியமான தேர்தலாக உள்ளது. இதில் குறிப்பிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளது.
திமுகவும், அமமுகவும் அதிமுக வை இடைத்தேர்தலில் தோல்வி அடையச் செய்து ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்து வருகின்றன. இதனால் அதிமுக, திமுக, அமமுக ஆகிய 3 கட்சிகளும் மக்களவைத் தேர்தலை விட இடைத்தேர்தலுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. விருதுநகர், சிவகங்கை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதேபோல, ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி போட்டியிடுகிறது. ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகங்கையில் மானா மதுரை, ராமநாதபுரத்தில் பரமக்குடி ஆகிய மூன்று சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக களம் காண்கிறது.
ஸ்டாலினின் பிரச்சாரத் திட்டத்தில் இந்த மூன்று தொகுதிகளும் இடம்பெறவில்லை. அந்த மூன்று தொகுதி வேட்பாளர்களையும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத இடங்களில் அறிமுகம் செய்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். முக்கியத்துவம் வாய்ந்த இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் சொந்த கட்சி வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்யாமல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக ஸ்டாலின் பிரச்சாரம் செய்வது திமுக தொண்டர்களிடம் குழப்பத்தையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி திமுக நிர்வாகி ஒருவர் கூறியதாவது: தொடக்கத்தில் இடைத்தேர்தல் தொகுதிகளிலும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அவரது பிரச்சாரப் பயணத்திலும் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் அனைத்தும் இடம்பெற்றிருந்தன. ஆனால், திடீரென பிரச்சாரப் பயணத்தை மாற்றி விட்டனர். அதற்கான காரணம் தெரியவில்லை. மக்களவைத் தொகுதிகளில் முதலில் பிரச்சாரத்தை முடித்து விட்டு பின்னர் இடைத்தேர்தல் தொகுதிகளில் கவனம் செலுத்த வாய்ப்புள்ளது. இடைத்தேர்தல் தான் முக்கியம். அது ஸ்டாலினுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago