தென் மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பலர் பிரச்சாரத்துக்கு வருகின் றனர் என மாநில செயலாளர் ஆர்.ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
இது குறித்து மதுரையில் அவர் `இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறியதாவது: மதுரை மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்பினர். ஆனால், அது நிறைவேறவில்லை இருப்பினும் 40 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுவதாகவே கருதுகிறது. எய்ம்ஸ் மருத்துவ மனை, பட்டாசு தொழிலாளர் பிரச்சினைக்குத் தீர்வு, நான்குவழிச் சாலை கள் எனப் பல கோரிக்கை களை மத்திய அரசு மதுரை மண்டலத்தில் நிறைவேற்றி உள்ளது. எங்களது முதல் எதிரி கம்யூனிஸ்ட்தான். இந்துத் துவாவையும், இந்துக்களையும் கேலி செய்யும் இக்கட்சியை தோற்கடிக்க பாஜக முழுமூச்சாகப் பாடுபடும்.
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக அறிவுஜீவிகள் மாநாடு நடத்தப்படும். இதில் ஏராளமான பொதுமக்களும் பங்கேற்பர். இம்மாத இறுதியில் சக்தி கேந்திரா என்றழைக்கப்படும் 5 வாக்குச்சாவடிகளின் பொறுப்பாளர்கள் மாநாடு நடக்கும். ஏப்.7 மற்றும் 15-ம் தேதிகளில் வீடு,வீடாகச் சென்று பாஜக தொண்டர்கள் பிரச்சாரம் செய்வர். இதற்காக மக்கள் தொடர்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் பலரும் பிரச்சாரத்துக்கு வருகின்றனர். அதிமுக வேட்பாளருடன் பாஜக.வினர் இணைந்து பணியாற்றுவர். பொதுக்கூட்டங்களில் திரளாக பங்கேற்போம். மதுரையில் கம்யூனிஸ்ட் வேட்பாளரைத் தோற்கடிப்பதில் அதிமுக.வை விட தீவிரமாக பாஜக.வினர் பணியாற்றுவர் என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago