விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு அரசியல் அடையாளம் கொடுத்ததே நான் தான் என, பாமக நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் அதிமுக சார்பில் சந்திரசேகர் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் உள்ள விசிக சார்பாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், சிதம்பரத்தில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், "சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை எதிர்த்து போட்டியிடுகிற வேட்பாளருக்கு அரசியல் அடையாளத்தைக் கொடுத்ததே நான் தான். தைலாபுரம் தோட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை அவர் தான் திறந்து வைத்தார். தமிழ் சமுதாயத்திற்கு பயன்படுவார் என்றெண்ணி, மதுரையில் இருந்த அவரை இங்கே கொண்டு வந்து அறிமுகம் செய்து, அவரை ஒரு தலைவராக ஊடகங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் நான் செய்த தவறு தான்" என, ராமதாஸ் தெரிவித்தார்.
திருமாவளவன் பெயரை குறிப்பிடாமல், ராமதாஸ் அவ்வாறு பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago