அதிமுக கூட்டணி அருமையான தம்பதிகளைக் கொண்டது; திமுக - காங்கிரஸ் விவாகரத்தான கூட்டணி: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

By செய்திப்பிரிவு

திமுக - காங்கிரஸ் கூட்டணி விவாகரத்து பெற்ற கூட்டணி என, பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.

அதிமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை அறிமுகம் செய்யும் கூட்டம் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:

"அதிமுக கூட்டணி நல்ல முகூர்த்தம் பார்த்து சேர்ந்த அருமையான தம்பதிகளைக் கொண்ட கூட்டணி. இந்த கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது. திமுக கூட்டணி விவாகரத்து பெற்ற கூட்டணி. திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்கெனவே விவாகரத்தாகிவிட்டது. விவாகரத்து பெற்றவர்கள் எப்படி ஒன்று சேர்ந்து குடும்பம் நடத்த முடியும்?

சர்தார் வல்லபாய் படேலுக்கு பின்பு வாழும் இரும்பு மனிதராக, இரும்பு பிரதமராக மோடி உள்ளார். பாஜக ஆட்சி மீண்டும் தொடருவதற்கு தமிழகத்தில் வலுவான கூட்டணி அமைந்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியினர் ஓட்டுக் கேட்டு வருவதற்கு இன்னும் 10 நாட்கள் ஆகும். அவர்கள் இப்போது தான் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்திருக்கின்றனர். ஏப்ரல் 19 ஆம் தேதி தான் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிக்கும் என நினைத்தேன்"

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்