அமித்ஷா பரிந்துரையில் சீட் பெற்ற நயினார்

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா பரிந்துரையால் சீட் கிடைத்துள்ளது.

ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

மறைந்த முதல்வர் ஜெய லலிதாவின் அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவோடு செல் வாக்குடன் தொழில் துறை அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பாஜகவில் சேர்ந்தார். தொடர்ந்து அவருக்கு மாநிலத் துணைத் தலைவர் பதவியும் வழங்கப்பட்டது.

கட்சியில் சேர்ந்தபோதே, மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவதாக அவரிடம் டெல்லி மேலிடம் உறுதி அளித்திருந்தது. மத்தியில் பாஜக ஆட்சிக்காலம் முடியப் போகும் இந்தத் தருணத்தில் மாநிலங்களவை எம்.பி. ஆக முடியாததால், மக் களவை எம்.பி.யாகும் எண்ணத் தில், தனது பூர்வீகமான நெல்லை தொகுதியைக் குறிவைத்தார்.

ராமநாதபுரம் நோக்கி..

ஆனால், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை, சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்ககப்பட்டதால், உடனே ராமநாதபுரத்தை நோக்கி காய் களை நகர்த்தினார்.

ராமநாதபுரத்தில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி நடந்த பாஜக பூத் கமிட்டி உறுப்பினர் கூட்டத்தில் கலந்துகொண்ட தேசியத் தலைவர் அமித்ஷாவிடம், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ராமநாதபுரம் ஒதுக்கப்பட்டால், தான் போட்டியிடுவதாகவும், தாராளமாக செலவு செய்யத் தயார் என்பதையும் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் தொகுதியில் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகம் இருப்பதால், தமிழக பாஜகவும் பச்சைக் கொடி காட்ட, தேசியத் தலைவர் அமித்ஷா பரிந்துரையின் பேரில் அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்