2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 20 இடங்களில் போட்டியிடுகிறது. திமுக சார்பில் யாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது என்பது குறித்து திமுக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அமமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன. கட்சிகள் தங்களது தொகுதிகளை இறுதிப்படுத்திவிட்ட நிலையில் காங்கிரஸ் புதுச்சேரி தொகுதி மற்றும் தமிழகத்தின் 9 இடங்களில் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டும், இழுபறி நீடித்தது.
இறுதியாக 9 தொகுதிகளை காங்கிரஸ் பட்டியலிட்டுக் கொடுக்க அதற்கு திமுக சம்மதம் தெரிவித்தது. பின்னர் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகள் முன்னிலையில் தங்கள் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அளித்தார்.
அதனடிப்படையில் கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக 20 தொகுதிகளிலும் திமுக 20 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. ஏற்கெனவே திமுக கூட்டணிக்கட்சிகள் தொகுதிகளின் உத்தேசப் பட்டியல் வெளியிட்ட நிலையில் அடுத்து திமுக வட்டாரத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் திமுக வேட்பாளர் பட்டியல்:
திமுக தொகுதி வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் :
1. வடசென்னை – டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமியின் மகன்)
2. மத்திய சென்னை- தயாநிதி மாறன்
3. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
5. காஞ்சிபுரம் (SC) – அண்ணாதுரை அல்லது செல்வம்
6. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்
7. வேலூர் - கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)
8. தருமபுரி – மணி அல்லது செந்தில் குமார்
9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
10. கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)
11. நீலகிரி- ஆ.ராசா
12. பொள்ளாச்சி – கோகுல் (பொங்கலூர் பழனிச்சாமி மருமகன்)
13. திண்டுக்கல் – வேலுச்சாமி
14. கடலூர் - கதிரவன் (எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன்)
15. மயிலாடுதுறை – ராமலிங்கம் (முன்னாள் எம்எல்ஏ) அல்லது ஜெகவீரபாண்டியன்
16. தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்
17. சேலம் - டாக்டர் பிரபு
18. தூத்துக்குடி – கனிமொழி
19. தென்காசி (SC) – தனுஷ்குமார் அல்லது பொன்ராஜ்
20. திருநெல்வேலி – கிரகாம்பெல் அல்லது ஆரோக்கிய ஞானவேல்
மேற்கொண்ட நபர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்படலாம் என திமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. இது அதிகாரபூர்வ பட்டியல் அல்ல.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago