மதுரையில் களமிறங்கும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் யார்?

By சுப.ஜனநாயக செல்வம்

திமுக, காங்கிரஸ் கூட்டணியில் மதுரை தொகுதி ஏறக்குறைய மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்குவது உறுதியான நிலையில் அக்கட்சி வேட்பாளராக யாரை களமிறக் குவது என்ற ஆலோசனை நடந்து வருகிறது.

மதுரை தொகுதியில் காங் கிரஸ் தனித்தும், கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்தும் இதுவரை 8 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் சார்பில் 1952-ல் கக்கன் தொடங்கி என்எம்ஆர். சுப்பராமன், ஆர்.வி. சுவாமிநாதன், ஏ.ஜி. சுப்பராமன், 1991-ல் ஏஜிஎஸ்.ராம்பாபு வரை வென்றுள்ளனர். 1996-ல் த.மா.கா. சார்பில் ஏஜிஎஸ். ராம்பாபு வெற்றிபெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கே.டி.கே. தங்கமணி 1957-ல் வெற்றி பெற்றார். ஆனால், மார்க்சிஸ்ட் சார்பில் 1967-ல் பி.ராமமூர்த்தி, 1999, 2004-ம் ஆண்டில் பி.மோகன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். ஜனதா கட்சி சார்பில் சுப்பி ரமணிய சுவாமி, திமுகவில் மு.க.அழகிரி, அதிமுகவில் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலா ஒருமுறை வெற்றி பெற் றுள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி இம்முறை வலுவான கூட்டணியோடு மதுரை யில் களமிறங்க உள்ள நிலையில், அக்கட்சி வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வேட் பாளரை கட்சியின் மாநிலச் செயற்குழுதான் முடிவு செய்யும். இருந்தாலும், அக்கட்சியின் மாநி லக்குழு உறுப்பினரும், ஜனநாயக மாதர் சங்க மாநில தலைவருமான உ.வாசுகி, கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் சி.ராம கிருஷ்ணன் (புறநகர்), ஆர்.விஜயராஜன் (மாநகர்) ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறு கையில், சென்னையில் 14-ம் தேதி நடக்கும் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றனர்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்