ஒரு கட்சியின் தலைவர் என்ற தகுதியை மறந்து ஸ்டாலின் விரக்தி யில் பேசுகிறார் என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்தார்.
கரூரில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியது: ஒரு கட்சி யின் தலைவருக்கு உண்டான தகுதி யுடன் பேசாமல், தகுதியை மறந்து ஸ்டாலின் ஒருமையில் பேசுகிறார். மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல் களில் வெற்றி பெறமாட்டோம் என்ற விரக்தியில் அரசியல் நாகரிகத் துக்கு அப்பாற்பட்டு அதிமுக கூட்டணி குறித்துப் பேசியுள்ளார்.
திமுக, 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தது. காங்கிரஸ் இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்தது. இந்த ஊழல், துரோக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக அதிமுக இந்தக் கூட்டணியை அமைத்துள்ளது.
இதுவரை மத்திய அரசில் எதிர்க்கட்சியாக இருந்தோம். தற் போது நட்பு, உறவு ஏற்பட்டு கூட்டணி யாக மாறியுள்ளோம். இனிமேல் ரூ.20,000 கோடியல்ல, ரூ.50,000 கோடி கேட்டாலும் தமிழகத்துக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள் ளது. மத்தியில் அமையும் ஆட்சி யில் அதிமுக முக்கிய பங்கு வகிக் கும். அதிமுக-பாஜக கூட்டணியால் நன்மை ஏற்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago