கூட்டணிக்காக விஜயகாந்திடம் கெஞ்சுகிறார் ஸ்டாலின்: அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

By செய்திப்பிரிவு

கூட்டணிக்காக விஜயகாந்திடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின் என அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும்வேளையில் அரசியல் கட்சிகள் தமக்குள் கூட்டணி குறித்து நடக்கும் திரைமறைவு வேலைகளும், விமர்சனங்களும் வெடித்துக் கிளம்பி வருகின்றன. அதிமுக-பாமக கூட்டணியை வெட்கமில்லாத கூட்டணி என ஸ்டாலின் விமர்சித்தார்.

பதிலுக்கு ஸ்டாலினை அனைவரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பாமக கூட்டணி கை நழுவியதுபோல் தேமுதிகவை விடக்கூடாது என்பதற்காக ஸ்டாலின் நேரடியாகக் களத்தில் குதித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரடியாகச் சந்தித்தார். இதற்கு அரசியல் முக்கியத்துவம் இருப்பதை இரு தரப்பும் மறுக்கவில்லை.

இந்நிலையில் ஸ்டாலின் இறங்கி வந்து கூட்டணிக்காக விஜயகாந்திடம் பேசுவதையும், காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் அளித்ததையும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

மதுரை உசிலம்பட்டியில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போது திமுக தலைவர் ஸ்டாலினைக் கண்டித்துப் பேசினார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ''ஒன்றுமில்லாத காங்கிரஸுக்கு 10 தொகுதிகளைக் கொடுத்து ஒதுக்கியதன் மூலம் அடிமையாகி விட்டார் ஸ்டாலின். ஆனால் நாங்கள் பாஜகவுக்கு 5 தொகுதிகள் மட்டுமே கொடுத்துள்ளோம். இன்று கூட்டணிக்காக விஜயகாந்தைப் பிடித்து கெஞ்சிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

இவரைப்போய் வருங்கால முதல்வர் என்று சொன்னால் யாரப்பா மதிப்பார்கள்? அதிமுக - பாமக - பாஜக கூட்டணியைப் பார்த்து எதிர்க்கட்சிகள் பித்துப்பிடித்து போயுள்ளனர்'' என்றார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

செல்லூர் ராஜூ இவ்வாறு விமர்சிக்கும் அதேவேளையில், தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி ஏதும் இல்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுக இடம் பெற்றுள்ளது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்த செய்தி வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்