கமல்ஹாசன் ஒரு குழந்தை: அதிமுக விமர்சனமும் வியூகமும்

By செய்திப்பிரிவு

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியதில் இருந்தே, அதிமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வந்தார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். ஆங்காங்கே நடக்கும் தவறுகள், முறைகேடுகள் குறித்து ஆதாரத்துடன் அமைச்சர்களுக்கு இ-மெயில் அனுப்புங்கள் என்றும் கூறினார். அவரது விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதிலடி கொடுத்தனர்.

தற்போது மக்களவைத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், பழைய விமர்சனங்களை மறந்து பாமகவையே தன் கூட்டணிக்குள் கொண்டுவந்து பலமான கூட்டணி அமைத்துவிட்டதாக அதிமுக தலைமை கூறிவருகிறது. தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளையும் கூட்டணிக்குள் இணைக்க அதிமுக தொடர்ந்து பேசிவருகிறது. தேமுதிக பிடிகொடுக்காமல் உள்ள நிலையில், கமல்ஹாசனை தங்களது கூட்டணியில் இடம்பெறச் செய்ய அதிமுக திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், திருவாரூரில் கடந்த 21-ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், ‘‘எம்ஜிஆர் போட்ட இலையை இரண்டாகப் பிரித்து சாப்பிடுகின்றனர்’’ என்றார். திமுக மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ‘‘இந்த திருவாரூர் பல நல்லவர்களை அரசியலுக்கு கொடுத்துள்ளது. அத்துடன் தமிழகத்தில் குடும்ப அரசியல், வாரிசு அரசியலையும் கொடுத்திருக்கிறது’’ என்றார்.

இந்நிலையில், திருவாரூரில் 120 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் விழா 22-ம் தேதி நடந்தது. இதில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கலந்துகொண்டார். முதல்நாள் கூட்டத்தில், திமுகவை விமர்சித்து கமல் பேசியதையும் குறிப்பிட்டார்.

‘‘அதிமுகவையும்தான் கமல் கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா இறந்த நாள் அதிமுகவினருக்கு தெரியுமா என்றுகூட கேட்டாரே’’ என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதில் அளித்த கே.பி.முனுசாமி, ‘‘அரசியலில் கமல்ஹாசன் ஒரு குழந்தை. குழந்தை பேசுவதை பெரியவர்கள் பெரிதுபடுத்த மாட்டார்கள். நாங்கள் பதில் கருத்து சொல்லும் அளவுக்கு அவர் இன்னும் வரவில்லை’’ என்றார்.

‘‘அதிமுக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யம் இடம்பெறுமா?’’ என்று கேட்டதற்கு, ‘‘பாமக, என்.ஆர்.

காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பின்னரே கூட்டணியை இறுதிசெய்து அறிவித்தோம். அதுபோல மற்ற கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறோம். இறுதிசெய்யப்பட்டதும் அறிவிப்போம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்