பாமக மீண்டும் திண்ணை பிரச்சாரம்

By செய்திப்பிரிவு

திராவிட கட்சிகளுடன் இனிமேல் கூட்டணி இல்லை என்ற பாமக தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்திருப்பது சமூக ஊடகங்களில் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரியில் இன்று நடக்க உள்ளது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி, தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். விமர்சனங்களை சமாளித்து 7 தொகுதிகளில் வெற்றி பெறுவது மற்றும் தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் தலைவர் ஜி.கே.மணியிடம் கேட்டபோது, ‘‘அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது மட்டும் முடிவாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது இன்னும் பேச்சுவார்த்தையில் உள்ளது. அது விரைவில் முடிவு செய்யப்படும். பெண்களுக்கு சில தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளது. கடந்த மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தலில் கிராமங்களில் செய்யப்பட்ட திண்ணை பிரச்சாரம் பாமகவுக்கு நல்ல பலனை கொடுத்தது. இந்தத் தேர்தலிலும் பாமக திண்ணை பிரச்சாரத்தை கையில் எடுக்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்