திமுக கூட்டணியில் எந்த குழப்ப மும் இல்லை என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நடை பெறும் திமுக ஊராட்சி சபை கூட்டம், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க கனிமொழி எம்பி நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவரை திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பெ.கீதாஜீவன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
செய்தியாளர்களிடம் கனிமொழி எம்பி கூறியதாவது: திமுக-காங்கி ரஸ் கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகளுடனும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்து அறிவிப்பார். எங்களுக்கு எந்தவித குழப்பமும் இல்லை. அதிமுகதான் குழம்பியுள்ளது.
எத்தனை பேரை சேர்க்க முடியுமோ, அத்தனை பேரை சேர்த்து வெற்றி பெற்றுவிடலாம் என தவறான சிந்தனையில் அவர் கள் இருக்கின்றனர். அதிமுகவை அதிகமாக விமர்சித்தது பாமக தான். இப்போது அவர்களுடன் போய்ச் சேர்ந்துள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரத் தில் இப்போது வந்துள்ள தீர்ப்பின் பின்னணி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். உண்மையிலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண் டும் என அதிமுக அரசு விரும்பி இருந்தால், மக்கள் போராடிக் கொண்டிருந்தபோதே தீர்த்து வைத்திருக்கலாம் என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago