மக்களவை தேர்தலுடன் சேர்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலம் ஆந்திரா. பிரதமர் மோடி ஆந்திராவுக்கு சிறப்பு நிதி அளிக்க தவறி விட்டதாக கூறி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறார் சந்திரபாபு நாயுடு. காங்கிரஸுக்கு எதிராக உருவான அரசியல் கட்சியான தெலுங்கு தேசம் தற்போது அந்த கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
அந்த மாநிலத்தில் இரண்டாவது மாநில கட்சியான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் வலிமையான எதிர்க்கட்சியாக திகழ்கிறது. இதனால் தமிழகத்தை போலவே ஆந்திராவிலும் தற்போது மாநில கட்சிகள் மட்டுமே கோலோச்சும் நிலைமை ஏற்பட்டுள்ளது. வலிமையாக இருந்த காங்கிரஸ் செல்வாக்கை இழந்து விட்டது. மற்றொரு தேசியக் கட்சியான பாஜகவுக்கு இங்கு ஆதரவு தளம் இல்லை. தற்போது இங்கு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளதால் தேர்தல் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில் தெலுங்குதேசம், பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் இரண்டாவது இடத்தை பிடித்தது.
2014- மக்களவை தேர்தல், ஆந்திரா
கட்சி
தொகுதிகள் (25)
வாக்கு சதவீதம் (%)
தெலுங்குதேசம்
15
29.10
பாஜக
2
8.50
ஓய்எஸ்ஆர் காங்
8
28.90
காங்கிரஸ்
0
11.5
ஆந்திராவில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் தெலுங்குதேசம் எதிர்ப்பு அலைகளை எதிர்கொண்டு வருகிறது. அதேசமயம் எதிரணியில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் இந்த அணிக்கு வலிமையான போட்டியை கொடுக்கும். பாஜகவை பொறுத்தவரையில் பெரிய அளவில் ஆதரவு தளம் இல்லாததால் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. பவன் குமாரின் ஜனசேனா பகுஜன் சமாஜ் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago