தேர்தல் களம் 2019; சத்தீஸ்கர்: வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அஜித் ஜோகி

மத்திய பிரதேசத்தில் பழங்குடி மக்கள் அதிகம் இருந்த பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு உருவான மாநிலம் சத்தீஸ்கர். மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மலைவாழ் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அதுபோலவே குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மாவோயிஸ்ட் அமைப்புகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக துணை ராணுவப்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சத்தீஸ்கர் அரசியலில் மாவோயிட்டுகளின் தாக்கம் பெரிய அளவில் இல்லை என்றாலும், மக்களிடம் உண்டு. நீண்டகாலமாக பாஜக இங்கு ஆட்சியில் இருந்த நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றது.

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (11)

வாக்கு சதவீதம்

பாஜக

10

48.7

காங்கிரஸ்

1

38.4

 

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் இங்கு ஆட்சியை பிடித்துள்ளது. இதுமட்டுமின்றி காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து புதிய கட்சி கண்ட முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தலைமையிலான ஜனதா காங்கிரஸ் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த கூட்டணி பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றபோதிலும் பாஜகவின் வாக்கு வங்கியை கடுமையாக பாதித்துள்ளது.

பாஜக வாக்கு 33% ஆக சரிந்தது. அதேசமயம் காங்கிரஸ் 43 சதவீத வாக்குகளை பெற்றது. ஜனதா காங்கிரஸ் கூட்டணி 7.3 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாவது அணியாக விளங்குகிறது. வரும் மக்களவை தேர்தலிலும் அஜித் ஜோகியின் கட்சி பாஜகவுக்கு அச்சுறுத்தலாகவே விளங்கும் என கருதப்படுகிறது. பாஜகவின் வாக்குகளை அஜித் ஜோகி சிதறிடிக்கச் செய்வதன் மூலம் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்பாகும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

2009- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (11)

வாக்கு சதவீதம்

பாஜக

10

45.03

காங்கிரஸ்

1

37.31

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE