தேர்தல் களம் 2019: நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகும் உத்தர பிரதேசம்

By நெல்லை ஜெனா

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசம், தேசத்தின் அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. அதிக எண்ணிக்கையிலான தொகுதிகள் இங்கு இருப்பதால் பிரதமரையும், ஆட்சியில் அமரப் போகும் கட்சியையும் தீர்மானிக்கும் மாநிலமாக உத்தர பிரதேசம் விளங்கி வருகிறது. இதன் காரணமாக நேரு தொடங்கி மோடி வரையில் பெரும்பாலான பிரதமர்கள் உத்தர பிரதேசத்தில் போட்டியிட்டு வென்றி பெற்றுள்ளனர்.

அதிகமான ஜாதிய கணக்குகளும், பிராந்திய, மொழி, மத உணர்வுகளும் உத்தர பிரதேச தேர்தல் களத்தில் எதிரொலிப்பது வழக்கம். சமீபகாலமாக ஜாதி கூட்டணியும், அதன் விளைவாக உருவாகும் எதிர் ஜாதிய கணக்குகளும் உத்தர பிரதேச அரசியலை மாற்றி மாற்றி ஆட்டிப்படைத்து வருகின்றன.

கடந்த தேர்தலில் பாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க காரணமாக இருந்ததும் உத்தர பிரதேச தேர்தல் களமே. அதற்கு அமித் ஷாவின் ஜாதிய கணக்குகள், பாஜகவுக்கு வெகுவாக உதவியதாக கூறுகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதனால் 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் கூடுதலாக 24 சதவீத வாக்குகளை பெற்று, பாஜக உத்தர பிரதேசத்தில் இதுவரை இல்லாத வெற்றி பெற முடிந்தது.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட மோடி, ஆம் ஆத்மி வேட்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை 3.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். பாஜகவின் ராஜ்நாத்சிங், ஹேமாமாலினி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் வெற்றி பெற்றனர். இதுபோலவே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வென்றனர். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் முலாயம் சிங் யாதவ், அவரது மருமகள் டிம்பிள் யாதவ் ஆகியோரும் வெற்றி பெற்ற முக்கிய வேட்பாளர்களாவர். 

2014- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (80)

வாக்கு சதவீதம்

பாஜக

71

42.30

சமாஜ்வாதி

5

22.20

பகுஜன் சமாஜ்

0

19.60

காங்கிரஸ்

2

7.50

 

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த முறை பெற்ற வெற்றியை பாஜக இனிமேல் பெற முடியுமா என்பது கேள்விக்குறியே. கடந்த தேர்தலில் நான்கு முனை போட்டியில் பாஜக பெற்ற வெற்றி இந்த முறை சாத்தியமாகாமல் போகக்கூடும். அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மக்களவை இடைத் தேர்தல் முடிவுகள் இதனை பறைச்சாற்றுகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து வெற்றி பெற்ற கோரக்பூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது.

முக்கிய எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கரம் கோர்த்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளன.

இருகட்சிகளும் தங்கள் கூட்டணியை ஏற்கெனவே அறிவித்து விட்டன. தலா 38 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. காங்கிரஸை பொறுத்தவரை பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. இருப்பினும் நேரு குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகளான ரேபரேலி மற்றும் அமேதியில் காங்கிரஸுக்கு விட்டுக் கொடுப்பதாக அக்கட்சிகள் அறிவித்துள்ளன.

தன்மானத்துக்கு ஏற்பட்ட இழுக்காக கருதும் காங்கிரஸ் மொத்தமுள்ள 80 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. எனவே உத்தர பிரதேசத்தில் இந்தமுறை பெருமளவு நேர் எதிர் போட்டியை சந்திக்கும் சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. எதிர்ப்பு வாக்குகள் அனைத்தும் ஒரணியில் திரள்வது பாஜகவுக்கு பெரும் சவாலே.

 

2009- மக்களவை தேர்தல்
 

கட்சி

தொகுதிகள் (26)

வாக்கு சதவீதம்

காங்கிரஸ் கூட்டணி

காங்கிரஸ்

21

18.25

ராஷ்ட்ரீய லோக்தளம்

5

36.57

சமாஜ்வாதி

23

23.26

பகுஜன் சமாஜ்

20

27.42

பாஜக

10

17.5

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்