ஹரியாணாவில் ஜாட் சமூக தலைவர் தேவிலால் வலிமையான அரசியல் சக்தியாக விளங்கினார். அவரது மகன் ஓம் பிரகாஷ் சவுதாலா தற்போது இந்திய தேசிய லோக்தள கட்சியை வழி நடத்துகிறார். அந்த கட்சிக்கு போட்டியாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் வலிமையான கட்சியாக இருந்து.
ஆனால் மெல்ல மெல்ல வாக்கு வங்கியை அதிகரித்து வந்த பாஜக கடந்த தேர்தலில் பெரும் சக்தியாக உருவெடுத்து மற்ற இருகட்சிகளையும் பின்னுக்கு தள்ளியது. ஹரியாணா ஜன்கித் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக பெரும் வெற்றி பெற்றது. 8 தொகுதிகளில் போட்டியிட்டு பாஜக 7 இடங்களை கைபற்றியது. கூட்டணிக் கட்சியான ஜன்கித் காங்கிரஸ் போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வியடைந்தது. இதைதொடர்ந்து நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை கைபற்றியது.
2014- மக்களவை தேர்தல்
கட்சி
தொகுதிகள் (10)
வாக்கு சதவீதம்
பாஜக
7
34.70
இந்திய தேசிய லோக்தளம்
2
24.40
காங்கிரஸ்
1
22.9
ஹரியாணாவின் வலிமை மிக்க மாநில தலைவரான ஓம் பிரகாஷ் சவுதலா ஊழல் வழக்கில் சிறை சென்ற பிறகு குடும்பத்தினரின் ஆதிக்கம் கட்சியில் நீடிக்கிறது. அவரது குடும்ப உறுப்பினர்கள் தனித்தனி கோஷ்டியாக செயல்படுவதால் இந்திய தேசிய லோக் தளம் வலுவிழந்து காணப்படுகிறது.
கட்சி பொறுப்பை இளைய மகன், அபய் சவுதாலா ஏற்று உள்ளார்.இதனால், அஜய் சவுதாலாவின் குடும்பத்திற்கு அதிகாரம் குறைக்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அஜய்யின் மனைவியும், எம்.எல்.ஏ.,வுமான நைனா சவுதாலா, அவரது மகன்கள், துஷ்யந்த் மற்றும் திக் விஜய் ஆகியோர், 'ஜனநாயக ஜனதா கட்சி' என்ற புதிய கட்சி தொடங்கினார்.
இந்த கட்சியை பிரபலப்படுத்த, நைனா சவுதாலா, பெண்களை திரட்டி, பேரணி நடத்துகிறார். இதற்கு போட்டியாக, அபய் சவுதாலா குடும்பத்தில் இருந்து, அவரது ஒன்று விட்ட சகோதரரின் மனைவி, சுனைனா சவுதாலாவை களம் இறக்கியுள்ளனர்.
மற்ற கட்சிகளின் நிலைமையை பொறுத்தவரையில், எதிர்ப்பு வாக்குகளை காங்கிரஸ் பெற முடியாத சூழலில் வலிமையான ஆளும் கட்சியாக பாஜக மீண்டும் தேர்தலை சந்திக்கும் சூழல் உள்ளது.
2009- மக்களவை தேர்தல்
கட்சி
தொகுதிகள் (10)
வாக்கு சதவீதம்
காங்கிரஸ்
9
41.7
ஹரியாணா ஜன்கித் காங்கிரஸ்
1
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago