காங்கிரஸுக்கு எதிராக வலிமையான மாநில கட்சியாக அகாலிதளம் உருவான மாநிலம் பஞ்சாப். 80களில் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தீவிரமாக்கிய பிரகாஷ் சிங் பாதல், அம்மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். காங்கிரஸ், அகாலிதளம் என இரு துருவ அரசியலாகவே பஞ்சாபில் நடந்து வந்தது. வாஜ்பாய் பிரதமரானபோது காங்கிரஸுக்கு எதிரான மாநில கட்சிகளை கூட்டணியில் இணைத்தபோது பாஜக கூட்டணியில் அகாலிதளமும் இணைந்தது.
அன்று முதல் பாஜக கூட்டணியில் அகாலிதளம் தொடர்ந்து வருகிறது. காங்கிரஸ் ஒருபுறமும், அகாலிதளம் - பாஜக கூட்டணி மறுபுறம் என பஞ்சாப் அரசியல் நகர்ந்து வந்தது. ஆனால் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் புதிதாக முளைத்த ஆம் ஆத்மி கட்சி, அகாலிதளத்தின் வாக்குகளை சிதறடித்தது. இதனால் கடந்த மக்களவை தேர்தலில் பஞ்சாப் மும்முனை போட்டியை சந்தித்தது.
2014- மக்களவை தேர்தல்
கட்சி
தொகுதிகள் (13)
வாக்கு சதவீதம்
அகாலிதளம்
4
26.3
பாஜக
2
8.7
ஆம் ஆத்மி
4
24.4
காங்கிரஸ்
3
33.10
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அகாலிதளம் - பாஜக கூட்டணி தோல்வியை தழுவியது. தற்போது ஆளும் கட்சியாக உள்ள காங்கிரஸ் வலிமையுடன் உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த பல தலைவர்கள் அக்கட்சியை விட்டு விலகி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இணைந்துள்ளனர்.
இதனால் கடந்த மக்களவை தேர்தலில் காட்டிய செல்வாக்கை ஆம் ஆத்மி தக்க வைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே காங்கிரஸுடன் கைகோர்த்து அக்கட்சி தேர்தலை சந்திக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் கூட்டணி உறுதியாவதில் இன்னமும் சிக்கல்கள் தீரவில்லை. அவ்வாறு நடந்தால் பஞ்சாப் அரசியல் இரு கூட்டணிகள் மோதும், இருதுருவ அரசியலை நோக்கி திரும்பும் என எதிர்பார்க்கலாம்.
2009- மக்களவை தேர்தல்
கட்சி
தொகுதிகள் (13)
வாக்கு சதவீதம்
காங்கிரஸ்
8
45.23
அகாலிதளம்
4
33.85
பாஜக
1
10.06
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago