கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சமாஜ்வாதி கட்சியின் உ.பி. முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், யாதவர் சமூகத்தினர் அதிகம் உள்ள மெயின்புரி தொகுதி அக்கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு அதன் சமாஜ்வாதி எம்பியாக முலாயமின் பேரனான தேஜ் பிரதாப் தற்போது உள்ளார். இங்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தேஜ் பிரதாப் அதிருப்தி அடைந்துள்ளார்.
இதற்கு காரணம், அகிலேஷின் சித்தப்பாவும் மாநிலங்களவையின் சமாஜ்வாதி கட்சி தலைவருமான ராம் கோபால் யாதவ் என தேஜ் பிரதாப் கருதினார். இதனால், தேஜ் பிரதாப்பின் ஆதரவாளர்கள் நேற்று மெயின்புரியில் ராம் கோபாலின் கொடும்பாவியை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மெயின்புரி மாவட்ட சமாஜ்வாதி கட்சியின் நிர்வாகத்தை ரத்து செய்த அகிலேஷ் அதை மாற்றி அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, தனது முதல் வேட்பாளர் பட்டியலை அறிவித்த அகிலேஷ் அதில் மேலும் மூன்று பெயர்களை இணைத்திருந்தார். அதில், அவரது மனைவியும் கன்னோஜின் தொகுதி இரண்டா வது முறை எம்பியுமான டிம்பிள் யாதவுக்கு மீண்டும் அதே தொகுதி யில் போட்டியிட வாய்ப்பளிக் கப்பட்டுள்ளது. உ.பி. சட்டப் பேரவை தேர்தலின் போது அகிலேஷ் தன் மனைவி மக்களவை யில் இனி போட்டியிட மாட்டார் எனக் கூறி இருந்தார். எனினும், அவரை மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
சமாஜ்வாதியின் 2-வது வேட் பாளர் பட்டியலில் அகிலேஷ் பெயர் இடம்பெறும் எனத் தெரிகிறது. ஆசம்கரில் அகிலேஷ் போட்டி யிடத் திட்டமிட்டுள்ளதாகக் கருதப் படுகிறது. கடந்த 2014 தேர்தலில் முலாயம் இரண்டு தொகுதிகளாக ஆசம்கர் மற்றும் மெயின்புரியில் போட்டியிட்டிருந்தார்.
இதில், மெயின்புரியை ராஜினாமா செய்து ஆசம்காரில் எம்பியாகத் தொடர்ந்திருந்தார். ஆசம்கரில் இந்தமுறை அகிலேஷ் போட்டியிடுவதன் மூலம் முலாய மின் அரசியல் வாரிசும் தான்தான் என நிரூபிக்க முயல்கிறார். தன் தந்தைக்கு மெயின்புரியை போல், அகிலேஷுக்கு ஆசம்கர் பாதுகாப்பானத் தொகுதியாகக் கருதப்படுகிறது. இங்கு யாதவர் களுடன் முஸ்லிம் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகள் அதிகமாக உள்ளன. இதன் பலன், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜுடன் கூட் டணி வைத்திருக்கும் அகிலே ஷுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago