மோடி, ராகுல் காந்தியை விட திறமையான தலைவர்கள் உள்ளனர்- கே.டி. ராமாராவ் விமர்சனம்

By என்.மகேஷ் குமார்

தெலங்கானா மாநிலம் வாரங்கலில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று டிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி. ராமாராவ் பேசியதாவது:2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலானது பிரதமர் நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர்ராகுல் காந்திக்கும் இடையேயானது என பரவலாக கருத்து உள்ளது.

ஆனால், அவர்கள் இருவரை காட்டிலும் திறமையான தலைவர்கள் பலர் நம் நாட்டில் உள்ளனர். பிராந்தியக் கட்சிகள் பலமாக உள்ள மாநிலங்களில் தேசிய கட்சிகளுக்கு செல்வாக்கு கிடையாது.

தெலங்கானாவில் அமல்படுத்தப்பட்டு வரும் பல திட்டங்களையே மோடியும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் செயல்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, 'மிஷன் பகீரதா' திட்டம் 11 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தெலங்கானாவில் உள்ள அணைக்கட்டுகளில் ஒன்றுக்கு கூட தேசிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை. மத்தியில் யார் ஆட்சியை பிடிப்பது என்பதை தெலங்கானா மக்கள் முடிவு செய்ய வேண்டும். நாளுக்கு நாள் மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது.

தெலங்கானாவுக்கு ரூ. 24 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என நிதி ஆயோக் பரிந்துரை செய்தபோதிலும், 24 பைசாவை கூட மோடி அரசு வழங்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்