ஆந்திரா பேரவைக்கு ஏப்.11-ல் தேர்தல்: 3,925 பேர்  வேட்பு மனு தாக்கல்

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு 3,925, மக்களவைத் தேர்தலுக்கு 548 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக் கும் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 18-ம் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெற்றது.

இதுதொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி கோபாலகிருஷ்ணா திவேதி, அமராவதியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்காக 3,925 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல 25 மக்களவைத் தொகுதிகளுக்காக 548 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக நந்தியாலம் மக்களவைத் தொகுதியில் 38 பேரும், அதே சட்டப்பேரவைத் தொகுதிக்கு 61 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மாநிலத்தில் மொத்தம் 3,93,45,717 வாக்காளர்கள் உள்ளனர். ஜனவரி மாதம் 25-ம் தேதிக்கு பின்னர் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் தொடர்பாக மாநிலம் முழுவதும் 734 வழக்குகள் பதிவாகி உள்ளன. ரூ.12.13 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்