பிரதமராக விரும்பவில்லை: அகிலேஷ் கருத்து

By செய்திப்பிரிவு

பிரதமராக விரும்பவில்லை. ஆனால் புதிய பிரதமரை உருவாக்க விரும்புகிறேன் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடந்த மாநாட்டில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி மீதான பயத்தால் சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்திருப்பதாகக் கூறுவது தவறு. அரசமைப்பு சாசனத்தைக் காப்பாற்றவே இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்தோம்.

கடந்த முறை மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்று எனது தந்தை முலாயம் சிங் யாதவ் வாழ்த்தினார். அது நடக்கவில்லை. இப்போது பிரதமர் மோடி பிரதமராக வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.

பிரதமராக நான் விரும்பவில்லை. ஆனால் புதிய பிரதமரை உருவாக்க விரும்புகிறேன். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராக பதவியேற்றால் மகிழ்ச்சி அடைவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்