நாட்டை விட்டு தப்பியோடியவர்களின் காவலாளிதான் மோடி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

By பிடிஐ

பிரதமர் தன்னைக் காவலாளி என்று கூறி தினம் தினம் நம்மிடம் பொய் சொல்லி வருகிறார். உண்மையில் அவர் நாட்டை விட்டுத் தப்பியோடியவர்களின் காவலாளிதான் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

''தேச ஒற்றுமைக்காக காங்கிரஸ் போராடி வருகிறது. நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் சிந்தனைக்கும் பாஜக ஆர்எஸ்எஸ் சிந்தனைக்கும் இடையே நடக்கும் ஒரு மோதல்தான்.

மோடி எங்கு சென்றாலும் தன்னைக் காவலாளி என்று தினம் தினம் நம்மிடம் பொய் சொல்கிறார்.

மிகப்பெரிய பணமோசடிகளில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பியோடிய நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸி, விஜய் மல்லையா போன்று தப்பிச் சென்றவர்களுக்கு அவர் காவலாளி என்பதுதான் உண்மை.

ஒரு பக்கம், காங்கிரஸ் நாட்டு மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டப் போராடி வருகிறது. இன்னொரு பக்கம் பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சிகள் சாதி, மதங்களைப் பேசி மக்களிடையே பிரிவினையைத் தூண்டி வருகிறது.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் இருவேறு கட்சிகளிடையே உள்ள சித்தாந்தத்தின் மோதலாகத்தான் இருக்கும்''.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்