புதுடெல்லி: மாநில முதல்வர்கள் 6 பேரில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்தான் ட்விட்டரில் மிகப் பிரபலமாக இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளமான ட்விட்டரில் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர்கள் பலரும் ட்விட்டரில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அவர்களை ஏராளமான ஆதரவாளர்களும் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், மாநில முதல்வர்களிலேயே டெல்லி முதல்வர்
அர்விந்த் கேஜ்ரிவால்தான் மிகவும் பிரபலமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இவரை 14.6 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இவருக்கு அடுத்த நிலையில், கோவா முன்னாள் முதல்வர் மறைந்த மனோகர் பாரிக்கர் இருந்தார். அவரை 6.9 மில்லியன் பேர் பின் தொடர்ந்தனர்.
இவர்களுக்கு அடுத்த நிலையில் பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உ.பி. முதல்வர் ஆதித்யநாத், மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் ட்விட்டரில் மிக பிரபலமாக உள்ளனர். எனினும், 6 முதல்வர்களில் அர்விந்த் கேஜ்ரிவால்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago