உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதியும், மாயாவதியின் பகுஜன் சமாஜும் கூட்டணி அமைத்திருக்கின்றன. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
எனினும், காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி மற்றும்ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி ஆகிய தொகுதிகளில் சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மரியாதை நிமித்தமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் காங்கிரஸும் தமது வேட்பாளர்களை நிறுத்தாமல் விடுவது குறித்துஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறியதாவது:உத்தரபிரதேசத்தில் போட்டியிட காங்கிரஸுக்கு வலிமையான வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. இந்தப் பிரச்சினையால், பகுஜன் சமாஜுக்கு ஒரு தொகுதியும், சமாஜ்வாதிக்கு 3 தொகுதிகளையும் விட்டுத் தரலாம் என காங்கிரஸ் கருதுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, சமாஜ்வாதியில் இருந்து விலகிய முலாயம் சிங்கின் சகோதரரான ஷிவ்பால்சிங் யாதவ், தனது புதிய கட்சியான பிரகதீஷ்சில் சமாஜ்வாதி லோகியா சார்பில் பெரோஸாபாத்தில் போட்டியிடுகிறார். எனவே, இந்தத் தொகுதியிலும் காங்கிரஸ் தமது வேட்பாளரை நிறுத்தாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன.
இதனை அறிந்த ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் அஜீத்சிங், தமது தொகுதியிலும், தனது மகன் ஜெயந்த் சவுத்ரி போட்டியிடும் தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தாமல் இருக்குமாறு காங்கிரஸிடம் கோரி வருகிறார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago