இம்ரான்கானுக்கு காதல் கடிதம் எழுதியவர்தான் மோடி; ஆனால் காங்கிரஸை பாகிஸ்தானில் நிற்கச் சொல்கிறார்கள்:  தருண் கோகாய் கிண்டல்

By பிடிஐ

அசாம் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய், பிரதமர் நரேந்திர மோடி இம்ரான் கானுக்கு காதல் கடிதம் எழுதியதாகக் கிண்டலடித்துள்ளார்.

பாகிஸ்தானில் காங்கிரஸ் நின்றால் வெற்றிபெறும் என்று பாஜக தலைவர் ராம் மாதவ் தெரிவித்து ஒருநாள் கடந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தருண் கோகாய் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அசாம் முதல்வராக இருந்த தருண் கோகாய் இன்று ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

''பாகிஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறலாம் என்று தாக்கிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் பாஜக தலைவர்கள். ஆனால் பாகிஸ்தான் பிரதமருக்குகாதல் கடிதம் எழுதியவர்தான் மோடி. அதை அதற்குள் நாம் மறந்துவிட்வில்லை.

பிரதமர் மோடி அங்கேபோய் பிறந்த நாளைக் கொண்டாடி பிரியாணியையும் சாப்பிட்டு வந்துவிட்டு இங்கே நம்மை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்.

நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகள் துயரம், வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் பிரச்சினைகள், 15 லட்சம் வங்கியில் போடுவதாக வேறு சொன்னார்கள்.

பேசுவதற்கு உண்மையான மக்கள் பிரச்சினைகள் நிறைய உள்ளன, எதை எதையோ பேசி மக்கள் கவனத்தை திசை திருப்புகிறார்கள்.

அடல் பிஹாரி வாஜ்பாய் பதவியில் இருந்தபோது அத்வானி மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர். ஆனால் அவரை அவரது சொந்தக் கட்சியே இன்று மிக மோசமான இடத்தில் வைத்து புறக்கணித்து வருகிறது. அந்தநிலை அவருக்கு மட்டும் என்று இல்லை. அருண் ஷோரி உள்ளிட்ட அனைத்து மூத்த தலைவர்களுக்குமே இதுதான் கதி. உண்மை என்னவெனில் அவர்கள் அனைவருமே மிகச்சிறந்த அறிவாளிகள். தன்னைச் சுற்றியுள்ள அறிவாளிகளையே மோடி நேசிப்பதில்லை என்பதுதான் உண்மை. பாஜகவின் உண்மை முகம் இது.

2014-ல் அளித்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. அனைத்து வகைகளிலும் மோடி அரசு தோல்வியடைந்த ஒரு ஆட்சியைத்தான் நடத்தியுள்ளது. மோடியை எதிர்த்து அல்ல, பிரிவினை, இனவாத, பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துதான் நமது போராட்டம். இந்த தேர்தல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய சவாலான தேர்தல்''.

இவ்வாறு தருண் கோகாய் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்