பாகிஸ்தானை தாக்கியதன் தாக்கம் மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்: எடியூரப்பாவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு

By இரா.வினோத்

பாகிஸ்தானுக்குள் சென்று தாக்கியதால், இந்தியாவில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இதன் தாக்கம், மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என கர்நாடக பாஜக தலைவர்எடியூரப்பா தெரிவித்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், கர்நாடக பாஜக‌ தலைவரும், முன்னாள் முதல்வருமான‌ எடியூரப்பா அண்மையில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

அதாவது, பாகிஸ்தானுக்குள் சென்று தீவிரவாதிகளின் முகாமை தாக்கியதால் பாஜகவின் செல்வாக்கு இந்தியாவில் அதிகரித்துள்ளதாகவும், இது, வரும் மக்களவைத் தேர்தலிலும் எதிரொலிக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

எடியூரப்பாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள், கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியதாவது: ஓட்டுக்காக பாஜக செய்துவரும் ச‌தி அதிர்ச்சியாக இருக்கிறது. போரின் விளைவுகள் பற்றி முழுமையாக தெரியாமல், அரசியல் ஆதாயத்துக்காக பாஜகவினர் போருக்கு தயாராகிறார்கள். ஒரு வீரரின் மரணத்தில் எந்த ஒரு தேசபக்தரும் மகிழ்ச்சி அடைய முடியாது. ஒரு தேச விரோதியால் மட்டுமே இப்படி யோசிக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இதனிடையே, தமது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்