ஒடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக.வுக்கு ஆதரவாக நட்சத்திர பட்டாளங்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளன.
ஒடிசாவில் மொத்தம் உள்ள 21 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இந்நிலையில், பாஜக.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் 40 நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை கடந்த புதன்கிழமை அக்கட்சி வெளியிட்டது. ஒடிசா பாஜக துணைத் தலைவர் சமீர் மொகந்தி அந்தப் பட்டியலை வெளியிட்டார். அந்தப் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக நேற்று அளித்தது.
அதில், பிரதமர் நரேந்திர மோடி, கட்சித் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் பலர் மற்றும் ஹேமா மாலினி உட்பட 9 திரை நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர் என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்தார்.
இவர்கள் தவிர பாஜக முன்னாள் முதல்வர்கள் ரமண் சிங், சிவ்ராஜ் சிங் சவுகான், அர்ஜுன் முண்டா, கிரிதர் கோமாங்கோ உட்பட பலர் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
ஒடிசா திரை நட்சத்திரங்கள் மிஹிர் தாஸ், ஸ்ரீதம் தாஸ், மகேஸ்வதா ராய், அபர்ஜிதா மொகந்தி, அனு சவுத்ரி, பிங்கி பிரதான், அஷ்ரும்நோச்சன் மொகந்தி, ஹரிஹர் மொகோபத்ரா ஆகியோர் ஒடிசாவில் பாஜக.வுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒடிசா தேர்தல் களை கட்ட உள்ளது.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago