பாஜக ஆதரவு வேட்பாளராக மண்டியாவில் சுமலதா போட்டி?- எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் திடீர் சந்திப்பு

By இரா.வினோத்

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், நடிகருமான அம்பரீஷின் மனைவி சுமலதா கர்நாடகாவின் மண்டியா தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார். அங்குள்ள அம்பரீஷ் ஆதரவாளர்களை சந்தித்து, ஆதரவு திரட்டினார். இந்நிலையில், சுமலதாவுக்கு வாய்ப்பளிக்காத காங்கிரஸ் மேலிடம், மண்டியா தொகுதியை மஜதவுக்கு ஒதுக்கியுள்ளது. அங்கு முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில், காங்கிரஸ் - மஜத கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்துள்ள சுமலதா, மண்டியாவில் சுயேச்சையாக அல்லது பாஜக வேட்பாளராக களமிறங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து வருகிறார்.

இன்னும் ஒரு சில தினங்களில் முடிவை தெரிவிப்பதாக கூறியுள்ள அவர், அம்பரீஷூக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர்களிடமும் பேசி வருகிறார். இந்நிலையில், நேற்று பெங்களூருவில் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை சுமலதா சந்தித்து பேசினார். அப்போது, மண்டியாவில் சுயேச்சையாக களமிறங்கும் தனக்கு பாஜகவின் ஆதரவை பெற்றுத்தரும்படி எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் அவர் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்து சுமலதா கூறுகையில், ''எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பூர்வீகம் மண்டியா என்பதால் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். பாஜகவில் இணைவது குறித்து எதுவும் பேசவில்லை''என்றார். எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், ‘‘சுமலதாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும். அவருக்காக அமித் ஷா உள்ளிட்டோரிடம் பேசிவிட்டு, 18-ம் தேதிக்குள் முடிவு சொல்வதாக கூறியிருக்கிறேன்’’ என்றார்.

கர்நாடக பாஜக வட்டாரத்தில் விசாரித்தபோது, ''சுமலதா மண்டியாவில் சுயேச்சை வேட்பாளராக களமிறங்க முடிவெடுத்துள்ளார். அவருக்கு பாஜக ஆதரவு அளிக்க திட்டமிட்டுள்ளது. சுமலதா நேரடியாக பாஜக வேட்பாளராக களமிறங்கினால் அங்கு வெற்றி பெறுவது சிரமம். காங்கிரஸை சேர்ந்த அம்பரீஷின் ஆதரவாளர்கள் தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள். சுயேச்சையாக போட்டியிட்டால் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் வாக்கு சுமலதாவுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது''என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்