உ.பி.யில் 20 பிரச்சாரக் கூட்டங்களில் பேசுகிறார் பிரதமர் மோடி

By ஆர்.ஷபிமுன்னா

பாஜகவை எதிர்த்து மெகா கூட்டணி அமைத்த அகிலேஷ் சிங் யாதவ், மாயாவதி மற்றும் அஜித் சிங் மக்களவைத் தேர்தலுக்கு உ.பி.யின் 11 கூட்டங்களில் பேசுகின்றனர். இதை விட அதிகமாக பிரதமர் நரேந்திர மோடி உ.பி.யின் 20 பிரச்சாரக் கூட்டங்களில் பேச உள்ளார்.

உ.பி.யில் ஏப்ரல் 11-ல்  தொடங்கி மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் உ.பி.யின் சஹரான்பூர், கைரனா, முசாபர் நகர், பிஜ்னோர், மீரட், பாக்பத், காஜியாபாத், அலிகர் மற்றும் கவுதம்புத் நகர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இந்நிலையில், ஏப்ரல் 7-ல் உ.பி.யின் சஹரான்பூரில் அகிலேஷ், மாயாவதி மற்றும் அஜித் சிங் இணைந்து பேசும் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. இதே மாவட்டத்தில் உள்ள பழமையான ஷாக்கும்பரி தேவி கோயிலில் பூஜை செய்த பின் பிரதமர் மோடியும் பிரச்சாரம் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொத்தம் 20 கூட்டங்களில் பேசவிருக்கும் மோடியின் கூட்டங்களுக்கு உள்ள ஆதரவைப் பொறுத்து அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். 2017-ல் நடைபெற்ற உ.பி. சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி 12 கூட்டங்கள் திட்டமிட்டிருந்தார்.

பிறகு ஆதரவு அதிகரித்தமையால் தன் பிரச்சாரக் கூட்டங்களின் எண்ணிக்கையை 21 எனக் கூட்டினார். இதனால், உ.பி.யில் பாஜக தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியையும் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

10 years ago

தேர்தல் 2019

5 years ago

தேர்தல் 2019

5 years ago

மேலும்