முன்னாள் மத்திய அமைச்சர் அம்பரீஷின் மனைவியும் நடிகையுமான சுமலதா மக்களவைத் தேர்தலில் மண்டியாவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.
அவருக்கு வாய்ப்பு அளிக்க மறுத்த காங்கிரஸ், மண்டியா தொகுதியை கூட்டணி கட்சியான மஜதவுக்கு ஒதுக்கியது. இதனால் சுமலதா சுயேச்சை வேட்பாளராக அங்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவரை எதிர்த்து மஜத வேட்பாளராக முதல்வர் குமாரசாமியின் மகன் நிகில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதனால் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரான நிகிலுக்கும், சுமலதாவுக்கும் இடையே நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாஜக மூத்த தலைவர் எஸ்.எம்.கிருஷ்ணாவை சந்தித்து சுமலதா ஆதரவு கோரினார். எனவே மண்டியாவில் வேட்பாளர் நிறுத்துவதை கைவிட்ட பாஜக, சுமலதாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சுமலதா பெங்களூருவில் நேற்று கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது சுமலதா கூறும்போது, ‘‘எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஆதரவு தெரிவித்த பாஜகவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மண்டியா மக்கள், இப்போது பாஜகவும் ஆதரவு அளித்திருப்பதால் எனது வெற்றி உறுதியாகிவிட்டது''என்றார்.
முக்கிய செய்திகள்
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
10 years ago
தேர்தல் 2019
5 years ago
தேர்தல் 2019
5 years ago